TamilsGuide

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலியும் உறுப்பினர்களாக உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் செயல் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல செப்டெம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, அது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மூவர் அடங்கிய குழுவொன்றை நான் நியமித்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என சபாநாயகர் இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment

Comment