TamilsGuide

நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது – சபையில் அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில்  அம்பலப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம்  குறித்து நாடாளுமன்றத்தில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், நாமல் ராஜபக்ச லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

நாமல் ராஜபக்ச தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் பட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பரீட்சையில் மோசடி செய்தே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச சட்டத்தரணியானார் என தெரிவித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment