TamilsGuide

ஜப்பான் மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜப்பான் தூதரகத்தின் அபிவிருத்தி,பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகர் சுகுமி டொயோட்டா (TSUGUMI TOYOTA) இன்றைய தினம் புதன்கிழமை(19) மன்னாரிற்கு விஜயம் செய்த  நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

இதன் போது ஜப்பான் தூதரகத்தின் அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகர் சுகுமி டொயோட்டா (TSUGUMI TOYOTA) மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது சிவில் சமூகங்களுடன் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வரும் குறித்த நிறுவனத்தின் செயல்பாடுகள்,மன்னார் மாவட்ட மக்கள்,விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள், குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பெண்கள்,சிறுவர்களின் அபிவிருத்தி செயற்பாடுகள்,மாவட்டத்தின் கல்வி விடயங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் சிவில் சமூகம் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் பின்னர் வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் அவரிடம் சுட்டிக்காட்டி உள்ளனர்.
 

Leave a comment

Comment