அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் (Institute of International Education) அறிக்கைப்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17% சரிந்துள்ளது.
2023-24 உடன் ஒப்பிடுகையில் இளங்கலையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11.3% அதிகரித்துள்ளது. அதே சமயம் முதுகலை பிரிவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 9.5% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு புதிய விசா நடைமுறை இதற்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


