TamilsGuide

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் SLPP – GMOA சந்திப்பு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சானக்க மதுகொட, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

GMOA தலைவர் கலாநிதி சஞ்சீவ தென்னகோன், செயலாளர் கலாநிதி பிரபாத் சுகததாச மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2026 வரவுசெலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசு மருத்துவமனைகளில் சேவைகளை மட்டுப்படுத்தியுள்ள நிலையில், GMOA அதன் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.


 

Leave a comment

Comment