'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் அஜித், சூர்யா காதல் குறித்து ரமேஷ்கண்ணா பேசிய சுவாரஸ்ய கருத்துக்கள் விழாவை கலகலப்பாக்கியது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து ரமேஷ் கண்ணா கூறுகையில், விஜய் சாருக்கு இயற்கையாகவே ஒரு திறமை இருக்கிறது. அவர் டப்பிங் செய்யச் செல்லும்போது, வசன பேப்பரை ஒரு முறை பார்த்துவிட்டு ஒரே டேக்கில் சொல்லிவிடுவார்.
சிவாஜி கணேசன் சாருக்கு பிறகு, அவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். படப்பிடிப்பு தளத்தில் கூட, விஜய் மிகவும் அமைதியாக இருப்பார். ஷாட் வரும்போது, அதை ஒரே டேக்கில் முடித்துவிடுவார்.
அவர் மிகவும் நட்பானவர், பணிவானவர், எந்த நேரத்திலும் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ள மாட்டார் என்று கூறினார்.


