இந்தாண்டு வெளியான டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் கயாடு லோஹர். இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு இணையத்தில் இவரது காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வைரானது.
இப்படத்தை தொடர்ந்து அதர்வா முரளி நடிக்கும்,"இதயம் முரளி" படத்திலும் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இம்மோர்ட்டல் படத்திலும் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதனிடையே, கயாடு லோஹர் இரவுநேர பார்ட்டிக்கு வருவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கயாடு லோஹர் அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாக பேசியுள்ளார்.
நேர்காணலில் பேசிய கயாடு லோஹர் , "சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும். எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் 4 என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.


