TamilsGuide

ரஜினிக்கு நடிப்பு சொல்லித் தந்த ஆசிரியர் மறைவு

இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.

கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார். 
 

Leave a comment

Comment