பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன் விருப்பம் தெரிவித்து, பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஆனால் முழுமையான விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷியா முழுப்பலத்துடன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து தற்போது வரை ஜெலன்ஸ்கி 9 முறை பிரான்ஸ் சென்றுள்ளார்.
ரஷியா தொடர்ந்து உக்ரைனின் எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.


