TamilsGuide

நான் மனதாரச் சொன்னேன். எதிரில் இருந்தவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.. 

"ஆகா! நீங்களாவது இந்த உண்மையை மனசாரப் புரிஞ்சு வச்சிருக்கீங்களே. உங்க பேச்சு அசல் உண்மை. ரொம்ப நன்றிங்க!"
நான் மனதாரச் சொன்னேன். எதிரில் இருந்தவர் சிரித்துக்கொண்டே கேட்டார், "என்னங்க இதுக்கு எதுக்கு எனக்கு நன்றி எல்லாம்? நானும் உங்களை மாதிரி ஒரு நடிகர்திலகம் ரசிகன் தான். அவர் நடிப்பு, கலை தாண்டி, அவருடைய அந்தப் பெரும் குணம் கொண்ட மனிதரைப் போற்றிக் கொண்டிருப்பவன். என்னைப் போல தமிழ்நாட்டுல லட்சக்கணக்கான பேரோட கருத்தும் இதுதான். இப்படிப்பட்ட ஒருத்தர்கிட்ட உங்க சொல் எனக்கு ரொம்ப இனிக்குது. அதனாலதான் நன்றி சொன்னேன்!"
அந்த வாடிக்கையாளரின் உரையாடலில் இருந்து...

புதிய வாடிக்கையாளராக இன்று கடைக்கு வந்தவர். ஏதோவொரு பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிக் casual-ஆகப் பேச ஆரம்பிச்சோம். அது பல பிரச்சினைகளின் அரட்டைகளுக்குப் பின்னாடி, எங்க பேச்சு நடிகர்திலகம் பற்றிய விஷயத்துல வந்து நின்னது. ஆரம்பத்துல, நான் என் ரசிகர் அடையாளத்தைச் சொல்லவே இல்லை.
"பழைய படங்கள்னு எடுத்தா, இப்போவும் பெரும்பாலும் எல்லார் வீடுகளிலும் நடிகர்திலகத்தோட படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்காங்க. அவரைப் பற்றி மற்றவர்கிட்ட பேசும்போது, ஒரு பெரிய ஆர்வத்துடனும், ரசிப்புடனும் கூர்ந்து கேட்கிறாங்க. 'சினிமா'ங்கிற சொல்லுக்கு இருக்கிற ஏளனம், சிவாஜியோட நடிப்பைப் பற்றிப் பேசும்போது இல்லாம, ஒரு கௌரவம் கிடைப்பதை நல்லாப் பார்க்க முடியுது," என்றார் அவர்.
இடையில் அரசியல் பற்றி நான் கேட்டேன். அவர் சற்றுக் கொதித்துப் போனார்.
"நடிகர்திலகத்தை அரசியல்ல காமராஜர் வெளிப்படையாக் களமிறக்கி விட்டுருந்தா, இந்தத் தமிழ்நாட்டின் சாபக்கேடு நம்மளத் துரத்தி வந்திருக்காது. அன்றைக்கு இருந்த நடிகர்திலகம் ரசிகர் படை இதையெல்லாம் சாதிச்சிருக்கும். என்ன செய்ய? நம்ம தலை விதி! அவரு தீவிர அரசியல்ல இறங்கியிருந்தா, அது ரொம்பச் சுலபமா நடந்திருக்கும். இது அன்று இருந்த நிலை. ஆனா, அப்படி இருந்த அவருக்கு அந்தத் தேர்தல் முடிவு கொடுத்த ரிசல்ட் வேறு! இது உண்மையிலேயே நடந்திருக்க முடியுமான்னு நம்ப முடியாததால தான், இன்னிக்கும் இந்த புலம்பல்கள்! வேற பெரிய தலைவர்களோட தோல்விகள் கூட இந்தளவுக்குப் பேசப்பட்டதில்லையே?"
"நடிகர்திலகம் தோற்றார்ங்கிறதை விட, 'எப்படித் தோற்கலாம்?'ங்கிறதுதான் எல்லாருக்கும் கேள்வியா இருக்கு. அவ்வளவு ஏன்... விடாம ஜெயிச்ச ஒருத்தர் தோத்திருந்தாக்கூட அது மக்களுக்கும் மீடியாக்களுக்கும் பெரிய விஷயமா இருந்திருக்காது. ஏன்னா, அந்த அளவுக்கு ஊழல்களையும் சுரண்டல்களையும் அவர் செஞ்சிருக்காரு. மக்கள் எல்லாரும் நடிகர்திலகம்கிட்ட பெரிய மரியாதை வச்சிருக்காங்க. இந்த காளான் அரசியல்வாதிகள் தான், தங்களோட நேர்மையற்ற செயல்களை மறைப்பதற்காக, இதை அடிக்கடி கையில எடுத்துக்குறாங்க. இவையெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ இந்த மீடியாக்கள் தான் பரபரப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் தேவையில்லாம ஒரே புலம்பலையே ஊதித் தள்ளுது!"
அவர் பேசி முடிக்கும்போது, ஒருவித பெருமிதமும் ஆதங்கமும் கலந்திருந்தது.
"நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி இல்லைங்க... நடிகர்திலகத்துக்கு அன்றைக்கு இருந்த பாசத்தை விட, இன்னைக்கு பக்தியா பெருமளவு பெருகித்தான் இருக்கு!" என்று ஒரு நீளப் பிரசங்கத்தை முடித்தார்.
அப்போதுதான் நான் அவருக்கு நன்றி சொன்னேன். ஒரு ரசிகனின் உள்ளத்து உணர்வுகளை அப்படியே கொட்டித் தீர்த்த ஒரு ரசிகன் அல்லவா அவர்!

 

செந்தில்வேல் சிவராஜ்
 

Leave a comment

Comment