அமிதாப் , ரஜினி நடித்த " Andhaa Kaanoon" என்று இந்திப்படம் வெளிவந்ததை சென்னையில் இருக்கும் பட அதிபர் சென்னை மயிலை எஸ் குருபாதம் அவர்கள்தான் சென்னை , செங்கல்பட்டு மற்றும் சில இடங்களுக்கு உரிமை வாங்கினார் . இவர் ராஜேந்தர் படமான "ரயில் பயணங்களில் " (1981) படம் தயாரித்தவர் இவருக்கும் திரு ரஜினி அவர்களுக்கும் தொழில் ரீதியான பகைமை உள்ளுக்குள் இருந்து வந்தது
அதை தீர்க்க நடுநிலையாளர் இருந்தும் அந்த பகை ஒருநாள்
...
ரஜினிகாந்த் கைது ஆவாரா என்று தினமும் வரும் தமிழ் பேப்பர்களில் செய்தி...
முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் அது ...
திரு ரஜினி காந்த் அவர்களை தாக்குவதற்கு மரக்கட்டை உடன் அடியாட்களுடன் போயஸ் கார்டனில் தயாரிப்பாளர் ஒரு மாலை நேரத்தில் வந்ததே அங்கு சம்பவம் .. இதோடு நீ பெங்களூர் குடும்பத்தோடு செல்லவேண்டும் . சென்னை உனக்கு வேலை இடமில்லை என்ற அளவுக்கு இருவரும் காரசமாக மோதல் அளவுக்கு வந்துவிட்டது
1986 ஆம் ஆண்டு ஒருநாள் மாலை மலர் பத்திரிகையில் செய்தியாக வந்தது ...
மறுநாள் , காலை முதல்வர் புரட்சிதலைவரின் ராமாவரம் தோட்டம் காலை 9 மணிக்கு முதல் ஆளாக ஆஜரானார் திரு ரஜினிகாந்த் . நடந்த சம்பவங்களை முதல்வரிடம் முறையிட்டார் ரஜினி .. தன்னை ஆள் வைத்து அடிக்கப்போவதாக அடியாட்கள் மிரட்டுவதாகவும் , தனக்கும் அந்த தயாரிப்பாளர் உடன் இருக்கும் பிரச்சினையும் நேரிடையாக புரட்சித்தலைவரிடம் சொன்னார் திரு ரஜினி ...
தைரியமாக வீடு செல்ல முதல்வர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது
அடுத்த சில மணி நேரத்தில் அந்த பிரச்சினை எப்படி தீர்க்கப்படுமோ அப்படி தீர்க்கப்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது
அதே ஆண்டு , தான் கட்டியிருந்த கல்யாண மண்டபம், ராகவேந்திரர் மண்டபம் பிரச்சினைக்கானது . அது சம்பந்தமாக நாம் எழுத வேண்டியதில்லை . சில வருடங்களுக்கு முன் திரு ரஜினிகாந்த் மேடையில் அதை உண்மையாக தனக்கு முதல்வர் புரட்சித்தலைவர் செய்த உண்மையை சொன்னது அனைவரும் அறிந்த ஒன்று ..
1986 ஆம் ஆண்டு மும்பையில் இந்திப்படம் ஒன்று நடித்து முடிந்த நிலையில் சென்னை வந்த ரஜினிகாந்த் வசம் ஜுனியர் விகடன் பத்திரிக்கை பேட்டி எடுத்தது
" நீங்கள் பார்த்து வியந்த தலைவர் யார் " - கேள்வி
அதற்கு ஒரே வரியில் ரஜினிகாந்த் சொன்னார்
" எம்ஜிஆருக்கு இருக்கும் மக்களின் அபரிதமான - எல்லையற்ற செல்வாக்கு அவரின் வீரம் கலந்த கருணை உள்ளம்
இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும் என்றே தோன்றுகிறது என்றார்..
எம்ஜிஆர் ஒரு வாழ்வியல்
தத்துவம்..
எம்ஜிஆர் ஒரு அவதாரம்
எம்ஜிஆர் ஒரு அறிவியல் விந்தை...
Nellaimani Admk


