சமீபத்தில் மலேசிய இராணுவ அதிகாரிகளின் புதிய வகுப்பிற்கான பட்டமளிப்பு விழாவின்போது அதிகாரிகளில் ஒருவர் அனைவருக்கும் முன்பாக மயக்கமுற்று கீழே விழுந்தார்.
கலந்துகொண்டவர்கள் அனைவரையும் நெகிழ வைத்து, அழவைத்த நிகழ்வு அவரது தந்தையின் உடனடி எதிர்வினை.
ஆம்... கூட்டத்தின் மத்தியில் இருந்த அந்தத் தந்தை, விரைந்து வந்தார். ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு மகனைத் தூக்கிச் செல்ல மறுத்துவிட்டார்.
கீழே கிடந்த மகனை தமது இரு கரங்களாலும் தூக்கி நிறுத்தினார். அவரும் நிமிர்ந்து நின்றார். மகனுக்கு சுயநினைவு திரும்பும் வரை தமது கைகளிலேயே அவனை பெருமையுடன் தாங்கிக் கொண்டார்.
ஒருபோதும் மறக்க முடியாத காட்சி இது. ஒரு தந்தையின் அர்ப்பணிப்பை ஒரு நொடியில் புரிய வைத்த நெகிழ்ச்சி இது.
தந்தை என்பது அசைக்க முடியாத அன்பு. வீழ்ந்துவிடாத கேடயம். அளவிட முடியாத தியாகம். தந்தையால் மட்டுமே இந்தத் தியாகத்தை செய்ய முடியும்.
தந்தையர் இன்னும் உயிருடன் இருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
தாய்மார்களுக்கு மட்டும்தான் பிள்ளைகள் மீது பாசமிருக்கும்.. தந்தைமார்களுக்கு அவ்வளவாக இருக்காது என்ற சமூகத்தின் மாயத் தோற்றத்தை ஒரே நொடியில் உடைத்த புகைப்படம் இது.


