TamilsGuide

பாணந்துறை பிரதேச சபை வரவு செலவு திட்ட சமர்பிப்பில் முரண்பாடு

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை எனக் கூறி ஏற்பட்ட முரண்பாடே இந்த அமைதியின்மைக்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும்,பாணந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தர்மசிறி பெரேரா தலைமையிலும் செயலாளர் நுவன் பெர்னாண்டோவின் பங்குபற்றுதலுடனும் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
 

Leave a comment

Comment