TamilsGuide

மலையகத்தில் உருவாகவுள்ள புதிய கட்சி

தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று (16)ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் இதனை தெரிவித்தார்.

குறித்த கட்சியிலிருந்து முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் ராம்,முன்னாள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் அழகுமுத்து நந்தகுமார்,உட்பட பல தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலான அதிரிப்தியாளர்கள் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகவும் அவர்கள் இப்போது ஒரு அமைப்பாக செயப்படுவதாகவும் எதிர்காலத்தில் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

வெள்ளையன் என்பவரால் மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கபபட்ட கட்சிதான் தொழிலாளர் தேசிய சங்கம் , அதில் கடந்த 20 வருடத்திற்கு மேலாக தான் கட்சியில் உண்மையானவராக இருந்ததாகவும் ஆனால் கடந்த சில காலங்களாக கட்சியின் கொள்கைக்கு மாறுபட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் கொள்கையினை பின்பற்றி அவர்களுடன் இணைந்து செயப்படுவதாகவும் உண்மையாக உழைத்தவர்களுக்கு கட்சியில் இடம் வழங்காது புதிதாக வந்தவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு பழையவர்கள் அனைவரும் பின் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வரும் எல்லோரும் ஒரே வாகனத்தில் கினிகத்தேனை வரை ஒன்றாகத்தான் வருவார்கள் கினிகத்தேனை மேல் வந்த பின் இருவரும் சண்டைப்போட்டுக்கொள்வார்கள்,இவையாவும் பொய் பின்னர் திரும்ப போகும் போது கினிகத்தேனைக்கு கீழ் ஒன்றாகத்தான் போவார்கள் ஆகவே கொழும்பு சென்று மலையக இனத்தினை அடகு வைத்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த அமைப்பிலிருந்து நாங்கள் அனைவரும் வெளியேறி விட்டோம் இன்னும் நிறைய பேர் வெளியேற இருக்கிறார்கள் எனவும் எதிர்காலத்தில் இந்த அமைப்பு புதிய அரசியல் கட்சியாக பெயர் சூட்டி அதனை தொழிற்சங்கமாகவும் பதிவு செய்ய உள்ளதாகவும் அதற்கு தலைவராக தன்னை தெரிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் ஒரு சில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும் குறித்த அமைப்பில் இணைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment