TamilsGuide

பிரதமர் தலைமையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

இதேவேளை வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு தூதரகங்களிடமிருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிறைவு விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, ” தேச எல்லைகளைக் கடந்து – இலங்கையர்களை வலுவூட்டல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்காக புலம்பெயர் சமூகத்திற்கு வசதிகளை வழங்குவதற்காக ஒரு மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது

தொழிலாளி ஒருவர் மரணிக்கும் பட்சத்தில் அவரது குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 40,000 ரூபாவில் இருந்து ஒருலட்சம் ரூபவாக ஆக உயர்த்துதல், வணிகத் துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல், நீண்டகால வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை பாராட்டுதல் மற்றும் புலம்பெயர் பிள்ளைகளுக்கான நிதி உதவித் திட்டத்தைத் ஆரம்பித்தல் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 6 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்தல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைத் ஆரம்பித்தல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுக் கடன்களை 10 மில்லியனாக அதிகரித்தல், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர் குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குதல் போன்ற பல வசதிகள் செயற்படுத்தப்பட்டன.
 

Leave a comment

Comment