கனடா ஜப்பானுக்கான பயணங்கள் தொடர்பில் கனடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட ஜப்பானில் கரடி தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளதால், கனடிய அரசு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட ஜப்பானில் கரடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதிகள், விடுதி மற்றும் ஹைக்கிங் பாதைகள் ஆகிய இடங்களில் கரடிகள் காணப்பட்டுள்ளதாகவும், சில சம்பவங்களில் மனித பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வட ஜப்பானுக்கு பயணம் செய்யும் போது சுற்றியுள்ள சூழலுக்கு எப்போதும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியாக அந்த இடங்களில் நடக்காமல் இருக்கவும், உள்ளூராட்சிகளின் எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றவும் என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஜப்பானில் 13 பேர் கரடிகளால் உயிரிழந்துள்ளனர். கரடிகள் பள்ளிகளுக்கு அருகே வலம் வருகிறது, சூப்பர்மார்க்கெட்டுகளில் அதிர்ச்சியளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயம் அதிகரித்த அகிதா, நியிகாடா மற்றும் ஹோக்கைடோ பகுதிகளுக்கு பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


