தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், கோவையில் நகைக்கடை ஒன்றை நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். அதன்பின்பு பேசிய ஆண்ட்ரியா, "கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். நான் அடிக்கடி இங்கு வருவேன்.தங்கம் பார்க்க மிகவும் அழகாக தான் இருக்கிறது. ஆனால் தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்


