TamilsGuide

ஸ்வீடனில் கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பலி

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

அப்போது வேகமாக வந்த பேருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பேருந்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 

Leave a comment

Comment