TamilsGuide

லண்டனில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு - நண்பர்கள் கூறிய தகவல்

லண்டனில் ஷாப்பிங் சென்டர் ஒன்றின் மாடியில் இருந்து யாழ் இளைஞன் விழுந்து உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12-ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ்ப்பாணதை சேர்ந்த 17 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 12-ஆம் திகதி, காலை 9:04 மணிக்கு, காவல்துறையின் அவசர சேவைப் பிரிவான 999-க்கு ஓர் அழைப்pஇல் பதற்றத்துடன் பேசிய பெண் ஒருவர் , அங்குள்ல ஷாப்பிங் சென்டர் ஒன்றின் உயரமான இடத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துவிட்டார் என்று காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

இதனையடுத்து உடனே காவல்துறை பாரா மெடிக்ஸ் (Paramedics – முதலுதவி சிகிச்சை அளிப்போர்) குழுவை அந்த இடத்திற்கு அனுப்பியதோடு, தாமும் விரைந்து சென்றார்கள்.

இளைஞனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அதேவேளை குறிப்பிட்ட ஷாப்பிங் சென்டரில் இருந்து இவரால் தற்செயலாகத் தவறி விழுந்திருக்க முடியாது என்றும், அங்கே பல பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்றும், ஷாப்பிங் சென்டரைப் பராமரிக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  நன்றாகப் படித்து வந்த அவருக்கு, அவர் ஆசைப்பட்ட பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவில்லை என்ற பெரும் மன வருத்தம் இருந்ததாக இளைஞனின் நண்பர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இளைஞனின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை பிரித்தானிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
 

Leave a comment

Comment