TamilsGuide

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்

ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம் இன்று(15) ஹட்டனில் இடம்பெற்றது.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் இடம்பெற்ற 1948 நவம்பர் 15 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஹீரோஸ் அமைப்பு இன்று (நவம்பர் 15) மௌனப் போராட்டத்தை நடாத்தியது.

இதேவேளை மலையகத்தின் ஒரு முக்கிய நகரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,  ”மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமை  உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு அர்த்தமுள்ள இலங்கை குடியுரிமை கிடைக்கும்” என்ற பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உரிமைகள் மற்றும் உரிமை கோரல்களுக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு ஹீரோஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment