எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.
கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முதல் தோற்றத்தை தனது சமூக வலைதளத் பக்கத்தில் வெளியிட்டுள்ள எஸ்.எஸ்.ராஜமவுலி, "உலக அரங்கில் இந்திய சினிமாவை மறுவரை செய்த பெண். மீண்டும் வருக. மந்தாகினியின் எண்ணற்ற சாயல்களை உலகம் காண காத்திருக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.
ராஜமவுலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர், ஐதராபாத் பிரியாணியை இதுவரை சாப்பிட முயற்சித்தது இல்லையா? என கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, "ஐதராபாத் பிரியாணி தான் உலகிலேயே சிறந்தது" என பதில் அளித்தார்.


