TamilsGuide

இங்கிலாந்தில் உள்நாட்டு விமானங்களில் பாரிய வீழ்ச்சி

இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகாலமாக உள்நாட்டு விமானங்களில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறந்த அடிக்கடி இயங்கும் ரயில் சேவைகள், அதிக விமான வரிகள், விமான சுற்று பாதை பாதிப்பு போன்ற பல்வேறு விடயங்களினாலும் மாறிவரும் பணி முறைகள் காரணமாகவும் குறிப்பாக COVID-19-க்குப் பின்னரான நிலை மாற்றம் போன்றவற்றினாலும் இவ்வாறான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உலகளாவிய விமானப் பயணம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் உள்நாட்டு UK விமானங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இம் மாதம், மற்றொரு இங்கிலாந்து பிராந்திய விமான நிறுவனமான Eastern Airways, உள்நாட்டில் பறப்பதற்கான ஆர்வம் தொடர்ந்து குறைந்து வருவதால், அதிகாரப்பூர்வமாக நிர்வாகத்தில் இறங்கியது.

2006 ஆம் ஆண்டில் 4இலட்சத்து 54ஆயிரத்து 375 விமானங்களின் உச்சத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டில் மொத்தம் 2 இலட்சத்து 13ஆயிரத்து 025 இங்கிலாந்து உள்நாட்டு விமானங்களாக குறைந்துள்ளதாக விமானப் பகுப்பாய்வு நிறுவனமான Cirium நடத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment