TamilsGuide

வேலை நிறுத்தத்தில் குதித்த ஸ்டார்பக்ஸின் ஊழியர்கள்

உலகளவில் சிறந்த வர்த்தக நாமமான ஸ்டார்பக்ஸின் தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறந்த ஊதியம் மற்றும் போதுமான ஊழியர்களை பணியமர்த்த கோரி, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தொழிற்சங்கப்படுத்தப்பட்ட 65 ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடைகளில் உள்ள பணியாளர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் குறித்து ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறுகையில்,

வேலைநிறுத்தம் அதன் ஆயிரக்கணக்கான கடைகளில் 1% க்கும் குறைவாகவே பாதிக்கும் என்றும், மேலும் பெரும்பாலான கடைகளில் சேவை வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment