நடிகர் சூரி, அஜித் குமரருடன் நேரில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக சூரி நடிப்பில் மாமன் படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி வெளியாகி இருந்தது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடந்திருந்தார்.
இந்நிலையில் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் சூரி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


