பிரித்தானிய அரசு நாட்டின் முதல் சிறிய அணு உலை அமைக்க வடக்கு வேல்ஸின் Anglesey தீவில் உள்ள விலஃபாவை (Wylfa) தெரிவு செய்துள்ளது.
இதன் மூலம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், காலநிலை இலக்குகளை அடையவும் அரசு முன்னெடுக்கும் அணு விரிவாக்கத் திட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
2025 ஜூன் மதஹத்தில் அரசு 2.5 பில்லியன் பவுண்டுகளை இந்த SMR திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது.
பெரிய அணு நிலையங்களை விட குறைந்த செலவில், விரைவாக கட்டப்படக்கூடிய இந்த சிறிய உலைகள், எதிர்காலத்தில் பிரித்தானியாவின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய முக்கிய பங்காற்றும்.
அமெரிக்க தூதர், வில்ஃபாவில் சிறிய உலை அமைப்பதை விமர்சித்து, அங்கு பெரிய அளவிலான அணு திட்டம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வில்ஃபா, 2015-ல் மூடப்பட்ட பழைய அணு நிலையம் அமைந்த இடம் என்பதால், புதிய திட்டம் குறித்து சர்வதேச அரசியல் விவாதம் எழுந்துள்ளது.
பிரித்தானிய அரசு, SMR-களுக்கு ரோல்ஸ்-ராய்ஸ் வடிவமைப்பைத் தெரிவு செய்துள்ளது. இந்த சிறிய உலைகள், சுமார் 30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாகவும், கட்டுமான காலத்தில் 3,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2030-களில் இந்த உலைகள் தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்படும் திட்டம் உள்ளது.
இதற்கிடையில், பெரிய அளவிலான புதிய அணு நிலையம் அமைக்கவும் அரசு GB Energy-Nuclear நிறுவனத்தை 2026-க்குள் இடம் தேர்வு செய்யச் செய்துள்ளது.
தற்போது, பிரித்தானியாவில் Hinkley Point C (மேற்கு இங்கிலாந்து) மற்றும் Sizewell C (கிழக்கு இங்கிலாந்து) ஆகிய இரண்டு பெரிய அணு நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளன.


