தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு டி சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்தார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் ஒரு குழுவினர் தான் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவத்தில் துசித ஹல்லோலுவ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார்.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபரான துசித ஹல்லோலுவ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அதன்படி, இந்த பிடியாணையை பிறப்பிக்க நீதிவான் உத்தரவிட்டார்.


