மாபெரும் நடனப் போட்டியை பிரித்தானிய மண்ணில் அரங்கேற்றி கலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர் பிரித்தானிய மண்வாழ் நடனக்கலாமணிகள். இதனை முன்னின்று நடாத்திய அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பல்வேறு நடனப்பள்ளிகளிலிருந்தும் நடனக்கலைஞர்கள் வந்து இப்போட்டியில் பங்கெடுத்து சிறப்பித்தனர்.
தகுதி வாய்ந்த மூத்த நடனக்கலைஞர்களின் நடுவர் அணியொன்று இந்நிகழ்விற்கு தீர்ப்பாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்விற்கு பல மனிதாபிமானிகள் மற்றும் நலன்விரும்பிகள் நிதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து இளையோர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் பணப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிருத்திய ஷேத்திரா நாட்டியப் பள்ளியின் நிர்வாகியும் OFAAL தேர்வுப் பிரிவின் பரீட்சையாளரும் புலம்பெயர் தேசத்தில் 15 வருடங்களுக்கு மேலாக நடன ஆசிரியையாக கடமையாற்றுபவருமான ஶ்ரீமதி துஷ்யந்தி கதிரவேலு அவர்களின் 39 மாணவமாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். 12 போட்டிகளில் பங்குகொண்ட இம்மாணவ மணிகள் 9 போட்டிகளில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றுக் கொண்டு குருவிற்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தனர்.
1. தனிநடனம் (6) - 6 மாணவிகள்
2. சிவகீர்த்தனம்- 9 மாணவிகள்
3. கல்யாணராமன்.. – 4 மாணவிகள்
4. சலங்கை கட்டி – 7 மாணவிகள்
5. வண்ண வண்ண சேலை கட்டும்… – 5 மாணவிகள்
6. சிவன் சக்தி நடனம் – 1 மாணவி, 1 மணவன்
7. ஆண்டாள் நடனம் – 6 மாணவிகள்
எல்லாக்குழந்தைகளையும் தன் சொந்தக் குழந்தைகளாக பயிற்றுவிக்கும் ஒரு குருவால் மட்டுமே தான் கற்பித்த அத்தனை மாணவச் செல்வங்களையும் வெற்றியாளர்களாக உருவாக்க முடியும். அதனை சாதித்து கலைக்குப் பெருமை சேர்த்த ஶ்ரீமதி துஷ்யந்தி கதிரவேலு அவர்களை மனதார வாழ்த்தி பாராட்டுவதுடன் அவரது கலைப்பயணம் மேன்மேலும் வளர்ந்து சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
கீர்த்தி சதீஸ்


