2025ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யா மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, 2025 முதல் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.காமன்வெல்த் அமைப்பை சாராத நாடுகளின் பயணிகள் மாஸ்கோவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை மாஸ்கோ உலகளவில் அனைவரையும் ஈர்க்கும் சுற்றுலாத்தலமாக விரிவடைந்து வருகிறது என்று மாஸ்கோ நகர சுற்றுலா குழு தெரிவித்துள்ளது.
மேலும் இ-விசா வசதி மற்றும் அங்கு நடைபெறும் கலாச்சார கொண்டாட்டங்கள் ஆகியவை உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருவதாகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


