வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர தனுஷ்க டி சில்வா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக பணியாற்றிய லசந்த விக்ரமசேகர, அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திகட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக பணியாற்றிய லசந்த விக்ரமசேகர, கடந்த 22 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் .
இதனையடுத்து வெலிகம பிரதேச சபையின் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக வெலிகம பிரதேசசபையின் தெரிவத்தாட்சி அலுவர் புலஸ்தி சேரசிங்க பத்திரனவினால் அறிவிக்கப்பட்டது
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளரிடம் 30 நாட்களுக்குள் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு பொருத்தமான உறுப்பினரை பரிந்துரைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது
இதனையடுத்து குறித்த பதவிக்கு சமீர தனுஷ்க டீ சில்வா தெரிவு செய்யப்பட்டதுடன் நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் அதிகார கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் வெலிகம பிரதேசசபையின் தெரிவத்தாட்சி அலுவர் புலஸ்தி சேரசிங்க பத்திரனவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது


