TamilsGuide

நெடுந்தீவுக்கான அரச படகுகளின் சேவை நேரத்தில் மாற்றம்

நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை, நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தினசரி மாலை நேர சேவை நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும். குமுதினி படகு சேவையில் மாற்றமில்லை என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment