நடிகை திவ்யபாரதி பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவரை ஜீ.வி.பிரகாஷ் உடன் இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஜீ.வி - சைந்தவி விவாகரத்துக்கு திவ்யபாரதி தான் காரணம் என ஒரு தரப்பு கிசுகிசுத்தது.
ஆனால் தான் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை நிச்சயம் காதலிக்க மாட்டேன் என விளக்கம் கொடுத்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை திவ்யபாரதி.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் திவ்யபாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது அவரது திருமணம் பற்றி கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
"திருமணம் செய்வேன் என எனக்கு நம்பிக்கை இல்லை" என பதில் சொல்லி திவ்யபாரதி எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
நகைக்கடை திறப்புவிழா என்பதால் நகை பற்றியே செய்தியாளர்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். உங்களுக்கு திருமணம் நடக்கும்போது மாப்பிள்ளை வீட்டில் இவ்வளவு சவரன் நகை போட வேண்டும் என கேட்டால் என்ன பண்ணுவீங்க என ஒருவர் கேட்டார்.
வரதட்சணை கேட்டால் நான் போலீசில் சென்று புகார் அளித்துவிடுவேன் என ஜாலியாக கூறி இருக்கிறார் திவ்யபாரதி.


