தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'தெலுசு கடா'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அடுத்து அவர் பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தவிர, சமீபத்தில் அவருக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ராஷி கன்னா ஆரம்பத்தில் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியநிலையில், தற்போது அவர் பின்வாங்கி விட்டாராம். ஏற்கனவே முன்னணி நடிகை ஒருவர் விலகியதைத் தொடர்ந்து, தற்போது ராஷி கன்னாவும் பின்வாங்கி இருக்கிறார்.
அவர் நடிக்க மறுத்தது 70 வயதான தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரின் படத்தில் தான் என்று பேசப்படுகிறது.


