நடப்பாண்டில் இந்த மாதம் 9ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,952,577 ஆக அதிகரித்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


