கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று இன்று காலை திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நிகழ்த்தப்பட்டது.
இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுப் பாலினம் ஆகியோரின் உரிமைகள் தொடர்பாக பேசப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மத்திய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன் அதனை ஏராளமன பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


