மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து பொகவந்தலாவை பலாங்கொடை பிரதான வீதி வழியாக கண்டி நோக்கி துண்டுகளாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற போது பொகவந்தலாவை கெம்பியன் தோட்டப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்துள்ளனர். எனினும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் லொறி பாரியளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


