TamilsGuide

855 கோடி வசூல் செய்து சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1.. வெற்றி கொண்டாட்டம் 

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து இந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை Hombale Films தயாரித்திருந்தது.

ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ருக்மிணி வசந்த் வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

முதல் நாளில் இருந்து காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி ஒட்டுமொத்தமாக ரூ. 855+ கோடி வசூல் செய்தது. இதன்மூலம் 2025ஆம் ஆண்டு இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.

இந்த நிலையில், மாபெரும் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படம்..
 

Leave a comment

Comment