கடந்த 2021-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் 'தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' என்ற அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
பதிலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்காளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கத்தார் மத்யஸ்தத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
தொடர்ந்து துருக்கியில் பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்றும், ஆப்கான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் எனவும் ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


