TamilsGuide

தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளுக்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக் கருத்திட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment