தமிழ் சினிமாவில் வம்சம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ராம்போ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது தகவல் கொடுக்கப்படவில்லை.


