கேப்டன் ராஜா என்ற படத்தில் தலைவர் விமான பைலட் ஆகவும் உடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடன் நடிக்க இருந்து
தலைவர் முதல்வர் ஆக படம் கைவிட பட்டது..
தலைவர் முதல்வர் ஆன அவருக்கு வாழ்த்து சொல்ல தன் பெற்றோர் உடன் தலைவரை பார்க்க வந்தார் நடிகை ஸ்ரீதேவி படம் பதிவில்....
வந்த அவரை வரவேற்று
அவரின் பெற்றோர் உடன் சிரித்து பேசி விருந்தினர் அறையில் மகிழ்ச்சி
அடையும் நேரம் நடிகை ஸ்ரீதேவி கண்கள் மட்டும் எங்கோ அடிக்கடி போக..
உலகம் போற்றிய சத்துணவு திட்டம் அதற்கு நன்கொடை கொடுத்த படமும் பதிவில்.....
காலை சிறப்பு உணவு முடிந்து தலைவர் இடம் ஸ்ரீதேவி குடும்பம் விடை பெற முயலும் போது
காந்த கண்கள் கொண்ட தலைவர்....
குறிக்கீடு மன்னிக்கவும்
தலைவர் படத்தில் ஒரு காட்சி வில்லன் நடிகர் அசோகன் பேசுவார்..
எக்ஸ்ரே இல்ல எக்ஸ்ரே
அதை அவன் கண்ணை பார்த்து கண்டு பிடுத்து இருப்பார்கள் போல.... அவன்கிட்ட எச்சரிக்கை ஆ இருக்கணும் இது சினிமாவில்...
இனி நிஜத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தார் புறப்படும் வேலையில் இரும்மா
என்று அந்த அறையில்
இருந்த கிட்டதட்ட 6 அடி உயரம் 70 கிலோ வெயிட்கொண்ட அந்த
பித்தளை விளக்கு
அதை அசால்ட்டா தன் வலது கரம் கொண்டு தூக்கி.......
இதை தானே இவ்வளவு நேரம் பார்த்து கொண்டு இருக்க என் நினைவா இருக்கட்டும் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல...
திகைத்து போனார் ஸ்ரீதேவி... என்னால் முடியாது என்று அவர் மறுக்க அந்த விளக்கு அதை இரண்டு பேர் தூக்கி கொண்டு ஸ்ரீதேவி அவர்கள் கார் டிக்கி அதில் தூக்கி வைத்தனர்...
பதிவு முடியல தள்ளி விடாதீர்கள்..
அன்னை ஜானகி எம்ஜிஆர் அதே அறையில் இருந்து அவர்களை வழி அனுப்பும் போது.
அந்த விளக்கு எங்கே என்று கண்ணால் தேட..
அம்மா அதை தலைவர் எடுத்து கொடுத்து விட்டார் என்பதை மகாலிங்கம் ஐயா சொல்ல....
விளக்கு போட்டும்
அதை அவர் ஒரு கையால் தூக்கி கொடுத்தார் என்று அறியும் போது அவர் உடல் வலிமை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார்
அன்னை ஜானகி
எம்ஜிஆர்.....
எம்ஜிஆர் ஒரு அவதாரம்
எம்ஜிஆர் ஒரு விந்தை மனிதர்...
எம்ஜிஆர் ஒரு அதிசியம்.
Devaraj Andrews


