TamilsGuide

வெள்ளை மாளிகையில் டிரம்ப் கண்முன் மயங்கி விழுந்த நபர்

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்போது, மருத்துவ அதிகாரிகள் உள்பட மருந்து நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மருந்து விலைக் குறைப்பு குறித்து நிர்வாகி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நின்றுகொண்டிருந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் விருந்தினராக வந்திருந்த கார்டன் பிண்ட்லே என்பவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேர இடைவேளைக்கு பின் நிகழ்வு மீண்டும் தொடங்கியது. அந்த நிர்வாகி நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாவும் அவர் நலமுடன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த உடன் பருமன் மருந்து விலை குறைப்பு ஒப்பந்தம் மூலம் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்கமுடியும் என்று கூறப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஜிஎல்பி -1 மருந்தை மிகவும் மலிவான விலையில் கொடுக்கவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment