TamilsGuide

ஹட்டன் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.

அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கான தற்காலிக தீர்வை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment