மெக்சிகோவில் மக்களிடம் கலந்துரையாடிய ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் (claudia sheinbaum) போதையில் வந்த நபரொருவர் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (claudia sheinbaum) , தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நேற்றைய தினம் (5) பொது இடத்தில் பொது மக்களிடம் கலந்துரையாடி கொண்டிருந்தார்.
அதன்போது அங்கிருந்த நபர் ஒருவர், கிளாடியா ஷீன்பாமை (claudia sheinbaum) பின்புறம் கட்டியணைத்து முத்தமிட முயன்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக ஜனாதிபதி சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அந்த நபரை அகற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (claudia sheinbaum) ,
பெண் என்ற ரீதியில் எனக்கு ஏற்பட்ட அத்துமீறல் தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வேன். இதுபோன்ற அத்துமீறல்களை முன்னரும் சந்தித்துள்ளேன். படிக்கும்போதும் எதிர்கொண்டுள்ளேன்.
இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த பெண்கள் மீதான தாக்குதல் எனத் தெரிவித்துள்ளார்.


