TamilsGuide

பல்லேகல தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ வீரர்களின் உதவியுடன், பல்லேகல பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நேற்று (05) மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் சொத்துக்களுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் பல்லேகலே பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Leave a comment

Comment