மகாச் சக்ரவர்த்தி இராஜராஜனின் 1040 வது “ சதயத்திருநாள் “ இன்று .
அருண்மொழிவர்மன் அல்லது
அருள்மொழிவர்மன்
என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் - சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார்.
‘ சோழ மரபினரின் பொற்காலம்'
என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும்.
ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இராஜராஜசோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று:
“ ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச்
செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை
மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக்
களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும்
நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும்
கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ
மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன்
பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும்
தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை
தேசுகொள்
ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
இவர் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.
இராஜராஜசோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட :
“ இராசராசேச்சரம் “
என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் .
தென்னிந்திய கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.
இன்று அம்மான்னனின் 1040 வது சதயத்திருநாள்.
உயர்க - ஓங்குக இராஜரஜசோழனின் புகழ் !


