TamilsGuide

ஓடுபாதையில் விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணியால் பரபரப்பு 

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து நேற்று மாலை மராட்டியத்தின் மும்பைக்கு ஆகாசா விமானம் புறப்படவிருந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

விமானம் ஓடுபாதை அருகே சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த பயணி இருக்கை அருகே இருந்த அவசரகால கதவை திறந்துள்ளார். இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒடுதளத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும், இதுகுறித்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பயணி ஜனுபூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தவறுதலாக அவசர கால கதவை திறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணி போலீஸ் நிலையத்திற்கு விரசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து 1 மணிநேர தாமதத்திற்குப்பின் விமானம் மும்பை புறப்பட்டது. விமானத்தின் அவசர கால கதவை பயணி திறக்க முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Leave a comment

Comment