TamilsGuide

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலி , மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
 

Leave a comment

Comment