TamilsGuide

யாழில் பேருந்து தரிப்பிடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவப் பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையைத் திருடிய சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்துக்காக பெண் சிப்பாய் காத்திருந்த வேளை அவரது கைப்பையைத் திருடிக்கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.

கைப்பையினுள் ஒரு பவுண் நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் அந்தப் பெண் சிப்பாய் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் கொடிகாமம் பகுதியில் பதுங்கியிருக்கின்றார் என்று கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரைக் கைது செய்த வேளை அவரது உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதானவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Comment