தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.
ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.
குழந்தைக பிறந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் ஜாய் கிரிசில்டாவின் விரலை குழந்தை பிடித்திருப்பது போன்று இருந்தது.
அந்த புகைப்படத்துடன் ஜாய் கிரிசில்டா ஹேஷ்டேக் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில்,"கார்பன்காபி ஆப் ஹிஸ் பார்தர் பேஸ்" என குறிப்பிட்டிருந்தார். அதாவது, அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதில்,"தந்தையை போலவே போஸ் கொடுக்கிறார்.. ஒரே மரபணு" என குறிப்பிட்டுள்ளார்.


