TamilsGuide

ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் - திணறும் தொழில்நுட்ப ஊழியர்கள்

உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன. 


 

Leave a comment

Comment